நடிகர்கள் யாரும் முதலமைச்சர் ஆகிவிடமுடியாது! இந்த கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் - அதிரடியாக பேசிய பிரபல நடிகர்

Report
199Shares

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவால் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் தன் அரசியல் முடிவை அறிவித்துவிட்டார்.

விரைவில் அவர் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கி களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்.

மேலும் நடிகர் விஜட் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் இருக்கின்றது. ஆனால் இதற்கெல்லாம் மாறாக இருப்பவர் நடிகர் சத்யராஜ்.

கொச்சியில் அவர் அளித்துள்ள பேட்டியில் நடிகர்கள் பலரும் அரசியலில் இறங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அக்கறையே தவிர மக்கள் மீதான நலனில் இல்லை.

நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிவிடமுடியாது. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது என் ஆசை. சினிமாவில் 42 ஆண்டுகள் இருந்தும் எனக்கு அரசியல் ஆசை இல்லை என கூறியுள்ளார்.

8395 total views