மாரி 2 படத்தில் இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்கிறாரா ?

Report
17Shares

தனுஷ் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த மாரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் தனுஷின் வித்தியாசமான தோற்றம், ஸ்டைல் போன்றவை குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசித்தனர், இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகின்றனர்.

இதில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். சாய்பல்லவி இப்படத்தில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.இதற்காக ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டாராம்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது, தனுஷ் கேன்ஸ் திரைப்படவிழாவுக்கு சென்றுள்ளதால் மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.

1202 total views