மலேசியாவில் நடந்த கிரிக்கெட் விளையாட்டில் நடிகர் ஆரிக்கு பலத்த காயம் - புகைப்படம் உள்ளே

Report
49Shares

நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் ஒன்று கூடி நட்சத்திர விழா இன்று கோலாலம்பூர் நேஷனல் புகிட் ஜலில் ஸ்டேடியத்தில், நடைபெற்றது.

இவ்விழாவில் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் உடன் மலேசிய கலைஞர்கள் இணைந்து நடிகர் ஆர்யா தலைமையில் ஒரு அணியும் அதர்வா தலைமையிலான கால்பந்து அணியும் பங்குபெறும் கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் அதர்வா அணி சார்பாக விளையாடிய நடிகர் ஆரி தன் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக கோல் போட முயற்சியில் ஈடுபட்ட போது எதிரணியின் கால்பந்து வீரர் பந்தை தடுக்க முயற்சிக்க எதிர்பாராதவிதமாக ஆரி மீது விழ காலில் பலத்த காயம் ஏற்பட்டது, விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டக்களத்தில் பதட்டம் நிலவியதை தொடர்ந்து விளையாடுவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது,

காலில் ஏற்பட்ட பெருத்த காயத்தின் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் ஆரி வெளியேறினார், இதற்காக தற்போது அவருக்கு மலேசியாவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2628 total views