பேரன் வயது இளைஞருடன் காதல்! மீண்டும் இணையக் காத்திருக்கும் முதியவர்..!!

Report
161Shares

பிரித்தானியாவில் ஓரினச்சேர்க்கையால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பாதிரியார் ஒருவர், தன் காதல் மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.

முன்னாள் பாதிரியாரான Philip Clements(79), இணையத்தில் சந்தித்த Florin Marin(24)ஐ என்பவரை ஓரினச்சேர்க்கைத் திருமணங்களை அனுமதிக்காத பிரித்தானிய சபை சட்டங்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.

பார்ட்டி விரும்பியான Florinக்கு ஒரு ஆடம்பர அபார்ட்மெண்ட் வாங்குவதற்காக, தனது 214,000 பவுண்டுகள் மதிப்புள்ள வீட்டையே விற்றாராம் Philip.

ஆனால் துரதிருஷ்டவசமாக கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

தற்போது மீண்டும் தங்கள் உறவு துளிர்க்கும் என நம்புவதாகவும் தனது உயிலில் அவரது பெயரை சேர்க்க இருப்பதாகவும் Philip தெரிவித்துள்ளார்

எனக்கு எண்பது வயதாகிறது, நான் இன்னும் சில ஆண்டுகள் உயிருடன் இருப்பேன், நான் இல்லையென்றாலும் Florin பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்னுடைய சொத்துக்கள், என்னுடைய சகோதரர்களுக்குக் கூட கிடையாது, என்னுடைய உயிலில் Florinதான் இருப்பார்” என்று Philip தெரிவித்துள்ளார்.

Philipஐப் பிரிந்ததும் Florin இன்னொரு ஆண் நண்பரைக் கண்டுபிடித்ததோடு, அவர் Philipஐவிட பணக்காரர் என்று வேறு பெருமையடித்திருந்தார்

இதுபற்றிக் கேட்டபோது Philip அது உண்மையில்லை என்றும், தொலைக்காட்சிகள் கட்டுக்கதை விடுவதாகவும் தெரிவித்துள்ள Philip, அதை Florin மறுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த மாதம் தங்கள் முதலாவது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடிய இருவரும் கிறிஸ்மசையும் இணைந்து கொண்டாட உள்ளதாக Philip தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஆரம்பத்திலிருந்தே இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த Philipஇன் சகோதரர் ஒரு முட்டாளாக இருக்காதே என்று அவனிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன், ஆனால் அவனுக்கு Florinஐத் தவிர யாரைக் குறித்தும் கவலை இல்லை என்று கூறினார்

6569 total views