MailPrint
மாற்றங்களுடன் பரத்
[ Thursday, 29 July 2010, 12:00.15 PM GMT +05:30 ]
தொடர்ந்து அட்டர் பிளாப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்த பரத் திடீரென ஞானோதயம் வந்தது போல் ஒவ்வொன்றாக மாற்ற ஆரம்பித்திருக்கிறார்.

முதல் கட்டமாக இவர் மாற்றியது இவரது பி.ஆர்.ஒ.வை. இதற்கு முன்பு இருந்த பி.ஆர்.ஓ.வால் பரத்க்கு உருப்படியாக ஒன்றும் பிரயோஜனமாக இல்லையாம். அதனால் இப்போது நிகில் முருகன் என்னும் ஹைடெக் பி.ஆர்.ஓ.வை பிடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அலுவலகத்தையும் வாஸ்துபடி மாற்றலாமா என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் படங்கள் புதிது புதிதாக புக் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்க்கிறார் பரத்.

எல்லாவற்றையும் மாற்றும் பரத் கொஞ்சம் நடிக்கக் கற்றுக் கொண்டால் பரவாயில்லை என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.