MailPrint
கௌதம்மேனன் தயாரிக்கும் இந்திப்படம்
[ Thursday, 29 July 2010, 11:50.14 AM GMT +05:30 ]
தமிழில் பல படங்களை இணைத் தயாரிப்பாக தயாரித்த இயக்குனர் கௌதம்மேனனின் தயாரிப்பு நிறுவனம் இப்போது இந்தியில் படத்தைத் தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்தின் கதைக்காக கௌதம்மேனன் ரொம்ப மெனக்கெட தேவையில்லை. காரணம் இந்தப் படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ரீமேக் ஆகும்.

தமிழில் இந்தப் படத்தை உருவாக்கிய டீம் தான் இந்தியிலும் இந்தப் படத்தை உருவாக்குகிறது. என்ன, ஹீரோவை மட்டும் மாற்றி விட்டார்கள். ஹீரோ பிரதிக். கதாநாயகி நம்ம ஊரு த்ரிஷாவே தான். இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைக்கிறார்.