பிரபல இந்தி நடிகர்- நடிகைகள்தான் இதில் தூதர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷா வீட்டிலும் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்த நாய் விபத்தில் அடிபட்டு கேட்பாரற்று கிடந்ததாம். அதைக் காப்பாற்றி தற்போது வளர்த்து வருகிறார் திரிஷா.அதற்கு காட்பெரி என்ற பெயரிட்டு வளர்த்து வருகிறார் அவர்.
இந்தியாவில் உள்ள எல்லோருக்குமே பிராணிகள் மேல் அன்பும் அக்கறையும் வரவேண்டும். நாய், பூனை போன்ற பிராணிகளிடம் அன்பு காட்டி அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்.
தெருக்களில் ஏராள மான நாய், பூனைகளை பார்க்க முடியும். அவை அரவணைப்பை தேடுகின்றன. வீடுகளில் வளரவும் விரும்புகின்றன. அவைகளுக்கு நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும். பிராணிகளை ரசிகர்கள் வீடுகளில் வளர்க்க வேண்டும் என்கிறார் திரிஷா. |