MailPrint
விஜய் ஜோடி காஜல் அகர்வால்
[ Tuesday, 27 July 2010, 01:19.14 PM GMT +05:30 ]
வேலாயுதம் படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த‌க் கூட்டணி நவம்ப‌ரில் படத்தை ஆரம்பிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

லிங்குசாமி சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதாக‌க் கூறி வந்தார். நடுவில் விஜய் கால்ஷீட் கொடுக்கவே சிம்புவுக்கு டாட்டா காட்டி விஜய் புராஜெக்டில் பிஸியாகிவிட்டார். இவர்கள் இணையும் படம் வேலாயுதம் முடிந்த பிறகு தொடங்கப்பட உள்ளது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்த புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை கேட்டுள்ளனர். காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது