MailPrint
நினைத்தாலே இனிக்கும்
[ Friday, 04 September 2009, 01:21.42 PM GMT +05:30 ]
மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கல்லூரி களம். ப்ரிதிவிராஜ், ஷக்தி, ப்ரியாமணி, கார்த்திக் குமார் நடிப்பில் சன் டி.வி வெளியிட்டிருக்கும் படம் 'நினைத்தாலே இனிக்கும்',

மலையாள படமான கிளாஸ் மேட்ஸ் படத்தின் தழுவல் தான் நினைத்தாலே இனிக்கும்.இயக்குனர் குமாரவேலன் அவர்கள் மலையாள படத்தில் இருந்து வெறும் ஐந்து காட்சிகளை மட்டும் தான் அப்படியே எடுத்து இருக்கோம் மற்றவை அனைத்தும் புதியவை என்றார்.பேசாம சீன் பை சீன் அப்படியே எடுத்து இருக்கலாம்.

ப்ரிதிவ்ராஜ் 8 ஆண்டுகள் கழித்து கல்லூரியில் நடக்கும் get-to-gether விழாவுக்கு வரும் வழியிலே கதை சொல்லி வருகிறார் . கல்லூரியில் ப்ரிதிவிராஜ்க்கும் கார்த்திக் குமார்க்கும் அடிக்கடி சண்டை நடக்கும்.சக்தி இருவருக்குமே நல்ல நண்பன்.வழக்கமா வர காலேஜ் தேர்தல்ல பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது(எத்தனை படத்துல பாக்கறது).நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது, ப்ரியாமணியும் ப்ரிதிவிராசும் ஒன்றாக இணைவார்களா? இது தான் நினைத்தாலே இனிக்கும் சஸ்பென்ஸ்

பொதுவா ஒவ்வொரு மனுசனுக்கும் அவனோட காலேஜ் லைப் கண்டிப்பா நினைத்தாலே இனிக்கும்.

அது என்னமோ தெரியுல விஜய் அன்டனி குரல் கேட்டாலே ஒரு red bull energy drink குடிச்ச மாதிரி ஒரு பீலிங்க்ஸ் ...படத்தின் பாட்டை பற்றி சொல்ல வேண்டாம் ஏற்கனவே ஹிட். பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு நல்லா இருக்கு. படத்தின் திரைக்கதையில் ஆங்காங்கே இயக்குனர் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார் , முக்கியமா இந்த கார்த்திக் குமார் கேரக்டர் முதல் காட்சியில் அவரை காட்டுவதோடு சரி அடுத்து முக்கா மணி நேரம் கழித்து தான் ஸ்க்ரீன் உள்ளே வருவார். ஷக்தி , இவரோட "மகேஷ் ,சரண்யா மற்றும் பலர்" படம் பார்த்தேன் அதில் இருந்து ஒரு படி உயர்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பிரிதிவிராஜ் இவரு என்ன பண்றாரு ரவுடியா இல்ல ஹீரோவா ஒன்னும் புரியல. ப்ரியாமணிக்கு ஒன்னும் பெருசா இல்ல. அட்வைஸ் பண்றதுக்குன்னு ஒருத்தர் அவர் தான் பாக்யராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திரிக்கிறார். லொள்ளு சபா ஜீவா ஒபெநிங் நல்ல காமெடி , காலேஜ் கேம்பஸ் காமெடி கொஞ்சம் கம்மி . ப்ரியாமணிக்கு அடிப்பட்டவுடன் பிரிதிவிராஜ் chemistry லேப்க்குள் அவரே மருந்து தயாரிப்பது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் தான். படம் போர் அடிக்காம போது , சஸ்பென்ஸ் இருப்பதால் இதுவா
அதுவா என்று கதை போகிறது . ஷக்தியின் காதலியாக வரும் பெண்ணை க்ளோஸ் அப்பில் பார்க்க சகிக்க வில்லை , அந்த பெண் ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் hostel வருவதாக கூறுவது 10 முழம் பூவை காதில் சுற்றியதுக்கு சமம்.

படம் சுமார் தான் மோசமில்லை.