அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதனைத் தொடர்ந்து ‘புலி வருது’ என்ற படத்தில் நடித்தார். படமோ புலிமாதிரி வந்து பூனை மாதிரி போய்விட்டது. இவர் தம்பி ஜீவாவோ ஓரிரு ஹிட் படங்களைக் கொடுத்து விட்டு முன்னுக்கு வந்துவிட பின்னுக்கு இருந்த ரமேஷ் மீது  இப்போது அவரது தந்தை ஆர்.பி.சவுத்திரியின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டது போலும். இப்போது மகனுக்காக தனது பேனரிலேயே படம் தயாரிக்கிறார்.
படத்திற்கு ‘பிள்ளையார் தெரு கடைசி வீடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஏராளமான கதைகளைக் கேட்டு கடைசியில் ஆர்.பி. சவுத்திரியே தேர்வு செய்த கதையாம் இது.
படத்தை இயக்குகிறார் திருமலை கிஷோர் என்ற புதுமுக இயக்குநர். தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருக்கும் இசை அமைப்பாளர் சக்ரி தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார்.
இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் சக்ரி, ‘காதல், ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த யதார்த்தமான கதையைக் கொண்டது இந்தப் படம். இதுவரைக்கும் ரமேஷின் திறமையை யாரும் சரியாகப் பயன்படுத்தவில்லை. இந்தப் படத்தில் அந்தக் குறையைப் போக்கப் போகிறேன்’ என்கிறார். |