சூர்யாவின் நண்பர் நாகேந்திரன். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வரும் இவர், தன் வாழ்வில் அதற்கு நேர் மாறாக செயல்படுகிறார். இவரது மனைவியைக் கொலை செய்த பழி சூர்யா மீது விழ காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். நீதிபதியாக பணியாற்றும் சூர்யாவின் அம்மா தனது மகனுக்காக பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கறிஞராக ஆஜராகிறார். வழக்கில் மேகலாக ஐ.பி.எஸ். அதிகாரியாக வந்து நாகேந்திரன் மனைவி வழக்கை கையிலெடுகிறார். இவற்றுக்கு மத்தியில் சூர்யாவின் மீது விழுந்த கொலைப்பழியை எப்படி நீக்கினார்கள் என்பதோடு வணக்கம் போடுகிறார்கள். சூர்யாவாக உதய்கிரண் தெலுங்கு நடிகரான இவர் தமிழ் இந்த அளவுக்குப் பேசி நடித்திருப்பது ஆச்சரியம்தான். மேகலாவாக மீராஜாஸ்மின். முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியாக இவர் வரும் காட்சிகளில் இவர் தலையில் வைத்திருக்கும் தொப்பிக்கும் தலைக்கும் சம்பந்தமே இல்லை. சின்ன தலையில் பெரிய தொப்பி. சிங்கபெருமாள் எனும் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார் ராதாரவி. ரம்பா, தலைவாசல் விஜய், ரோகிணி, நிழல்கள் ரவி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவாவின் மறுபிரவேசம். பாடல்கள் எல்லாமே கேட்கிற ரகமாகத்தான் இருக்கின்றன. பின்னணி இசையில்தான் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். கோர்ட் காட்சிகளில் கதாபாத்திரங்களை விட கலைஞரின் வசனங்கள்தான் பேசுகின்றன. சில இடங்களில் பெரியாரையும் அண்ணாவையும் துணைக்கு அழைத்த வசனங்கள். அதனால்தானோ என்னவோ எல்லாவற்றையும் தாண்டி பல இடங்களில் நாடகதனமே மிஞ்சுகின்றனது.
கலைஞர் கதை வனத்தில் உருவாகும் படம் என்பதால் படத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் நிறைவேற்யிருக்கிறார்கள் பெண்சிங்கம் பட குழுவினர். |