MailPrint
அழகான பொண்ணுதான் சஸ்பென்ஸ்
[ Wednesday, 10 March 2010, 06:01.04 PM GMT +05:30 ]
அழகான பொண்ணுதான் படத்தில் நமீதா நடிப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் தெரியாத செய்தி இந்தப் படத்தில் பார்த்திபனும் நடிக்கிறாராம்.
அட என்னப்பா இது... 16 வயசு பையன் தானே ஹீரோ... என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். படம் விரைவில் வெளிவரவிருப்பதால் படம் பற்றிய சஸ்பென்ஸை உடைத்திருக்கிறார்கள். படத்தில் நிஜ ஹீரோ பார்த்திபன்தானாம். அவர் தனது வாழ்வில் 16 வயதில் நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்ப்பதுதான் படத்தின் கதையாம். பதினாறு வயதில் பையன் ஒருவர் நடித்துள்ளார். படத்தின் கதை நகரும் இடத்தில் ஓவர்லேப்பில் பார்த்திபன் குரல்தான் ஒலிக்குமாம். ‘இது படத்திற்கு இன்னும் மெருகேற்றுவதாக அமையும்’ என்கிறார் படத்தின் இயக்குநர்.


இப்பவாவது சஸ்பென்ஸை ஓப்பன் பண்ணுணீங்களே...!