குடிசைப் போட்டு வாழும் அந்த மக்களுக்கு நல்ல வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது சுறாவின் ஆசை, லட்சியம், கனவு எல்லாமே. அந்த லட்சியத்திற்கு குறுக்கே வந்து நிற்கிறார் அந்த இடத்தை அடையத் துடிக்கும் வில்லன். அந்த மக்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி அந்த இடத்தை வளைத்துப் போட நினைக்கும் அரசியல்வாதி தாதாவை சுறா எப்படி எதிர்கொள்கிறார் அதில் வெற்றி பெற்று அந்த மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தாரா என்பது க்ளைமேக்ஸ்.
ஒருவார காலமாக காணாமல் போன மீனவர்களை மீட்புக் குழுவினர் தேடுகிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னர் சுறாவைத் தவிர மற்ற மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கரை சேர்க்கப்படுகின்றனர். விஜய் மட்டும் நீச்சலடித்தே கரை சேர்கிறார். (ஹீரோவாச்சே… சும்மாவா…!!!) குப்பத்து கேரக்டரில் விஜய் நடிக்கத்தான் செய்திருக்கிறரே தவிர, அந்த கேரக்டர் அவருக்குள் இறங்க மறுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. நன்றாக டேன்ஸ் ஆடுகிறார். மற்றபடி….
தமன்னாவின் அரைகுறை ஆடையைப் போலவே அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரும். விஜய் தமன்னா காம்பினேஷன் காட்சிகளில் அநியாயத்துக்கு கடுப்பை உருவாக்குகிறார்கள். தற்கொலை செய்யப் போகும் தமன்னா மேக்அப் போடுவது அதற்கு அவர் சொல்லும் விளக்கம்.. ரொம்ப தான் யோசிக்கிறாங்கப்பூ… நடிப்பு… எக்ஸ்பிரஷன்ஸ்… ம்கூம்… இத்தனைக்கும் தமன்னா காட்டில் மழையாம்…
வடிவேலை வேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். அவர் கஷ்டப்பட்டு நம்மை சிரிக்க வைக்கிறார். ஆனால் பாதி காட்சிகளில் கூட சிரிப்பு வரவில்லை. வெண்ணிற ஆடை மூர்த்தி, வடிவேலு வரும் அந்த காமடி துவக்கத்தில் ரசிக்கும்படி இருந்தாலும் முடிவில்… அய்யோடா.. என்று முடிகிறது. வில்லன் அடிக்கடி உறுமுகிறார். ஏகப்பட்ட பில்டப் குடுக்கிறார். அவரது லிப் மூவ்மென்ட் மேட்ச் ஆகலை. மார்க்கெட்டில் நடக்கின்ற அந்த சண்டைக்காட்சிகள் சூப்பர். ஆனால் அவ்வளவு நேரம் அந்த சண்டைக்காட்சி தேவையா…?
பாடல்கள் பின்னணி இசை ஓ.கே.தான். ஒண்ணுமே இல்லாத காட்சிகளை இடங்களைக் கூட பிரமாண்டமாகக் காட்டிய ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் நல்ல ஒளிப்பதிவு. சில வருடங்களுக்கு முன்பு கிராமத்து படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமாரின் மறு என்ட்ரிதான் இந்தப் படம்.
சென்னையில் அடிக்கடி நிகழும் சம்பவமான குடிசை தீ பிடித்தல், அதில் மக்கள் பாதிக்கப்படுதல், அவர்களை நகரத்தை விட்டு பல மைல் தூரத்திற்கு கொண்டு குடி இருத்தல்… எனும் விஷயத்தை கதையின் கருவாக எடுத்திருக்கிறார்கள். கவனிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டிய கதை. ஆனால் விஜய்க்காக கதையில் செய்த மாற்றங்களோலோ என்னமோ கதையை திரைக்கதையாக்கும் போது சின்னாபின்னமாக்கி சிதறடித்திருக்கிறார்கள். இல்லாவிட்டல் இந்தக் கதை தமிழ் சினிமாவில் இன்னொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். |