MailPrint
கண்டேன்காதலை
[ Saturday, 07 November 2009, 02:06.23 PM GMT +05:30 ]
ஜப் வி மெட் இந்திப் படத்தின் தமிழ் ‌ரீமேக். ஜெயம் கொண்டான் இயக்குனர் ஆர்.கண்ணனின் இரண்டாவது படைப்பு.
தோல்வியின் சுமையால் சோகமே உருவாக தி‌ரியும் ஹீரோ. துறுதுறுவென அந்த‌க் கணத்தில் மட்டுமே வாழும் ஜாலி ஹீரோயின். எதிரெதிர் துருவங்களின் சந்திப்பும், அதில் உருவாகும் கெமிஸ்ட்‌ரியும், குழப்பமும், சுபமான முடிவும் கதை.

படத்தின் ஹீரோ என்று சந்தானத்தை சொல்லலாம். கதைப்படி இவர் தமன்னாவின் தாய் மாமன். ஒ‌ரி‌ஜினலில் துளியூண்டு வரும் இந்த கதாபாத்திரத்தை உறுத்தாமல் தட்டி படம் நெடுக நீட்டியதற்கு தனிப் பாராட்டு இயக்குனருக்கு. இவர் அடிக்கிற ஒவ்வொரு கமெண்டிலும் (உதாரணம், காக்கா பறக்கிற மாதி‌ரி மீசை) கவுண்டர் மணம். இவருக்கு கூட்டணி சிங்கமுத்து. கொட்டி முழக்கியிருக்கிறார்கள்.

ஜப் வி மெட்டின் வெற்றிக்கு முக்கிய காரணம் க‌ரீனா கபூ‌ரின் துறுதுறு நடிப்பு. தமன்னா அதில் தாண்டியிருப்பது பாதி கிணறு. டிடிஆ‌ரிடம் அவர் விடும் ரவுசு ஒருவிதம் என்றால், லாட்‌ஜ் மேனேஜர் மயில்சாமியின் பேச்சின் உள்ளர்த்தம் பு‌ரியாமல் அவருக்கு அப்பாவியாக பதில் சொல்லும் இடம் வெகுளித்தனத்தின் உச்சம். பல நேரம் லூஸோ என்று நினைக்கும்படி அவர் நடந்து கொள்வது உறுத்தல். எனக்கொரு கசின் இருக்கா என்று பரத்தை தேற்றுகிறாரே... ரகளை.

ஆ‌க்சன் படங்களில் நடித்த விளைவா தெ‌ரியவில்லை, சும்மா நிற்கும்போதும் ஒரு விறைப்பு பரத்திடம். சோக ஆசாமியாக்கி முதல் பாதியில் உலவவிட்டிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் அவர் ஜாலிக்கு திரும்பும்போது... ஸா‌ரி டூ லேட்.

இனிமையான இசை. குறிப்பாக மக்கா மக்கா... கொலவப்போடு கிராமத்து கிக். உறுத்தாத ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்யம். இரண்டாம் பாதியில் எடிட்ட‌ரின் கத்தி‌ரிக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம்.

ஒன்பது மாத உறக்கம் முடிந்து தமன்னாவின் வீட்டில் திடீரென அவரை தேடுவதும், வ‌ரிந்துகட்டி கல்யாண ஏற்பாட்டில் இறங்குவதும், ரசிகர்களுக்கு பாப்கார்ன் இடைவேளை. தமன்னாவின் காதலன் கதாபாத்திரம் சும்மா. அதனாலேயே காதலுக்காக தமன்னா உருகும் போது நம்மால் உச் கொட்ட முடியவில்லை.

தமன்னாவின் கதாபாத்திரம், சந்தானத்தின் சரவெடி... கண்டேன் காதலை ஒருமுறை பார்க்கலாம்.