ஓவியா பிரியாணி, ஜூலி ஜூஸ், காயத்ரி சூப்..! பிக்பாஸ் காம்போ அசத்தும் ஓட்டல்…!!

Report
166Shares

உங்களுக்கு குஷ்பு இட்லி தெரியும் ஆனால் காயத்ரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா வந்திருப்பது தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் கழுவிக் கழுவி ஊத்தினாலும் அதை பார்க்கத் தவறவில்லை என்றே கூற வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அதே நினைவில் டிவியை ஆன் செய்தவர்கள் உண்டு.

இந்நிலையில் உணவகம் ஒன்று பிக் பாஸ் ஸ்பெஷல் மெனுவை அறிவித்துள்ளது.

பிக் பாஸ் கமல் காம்போவில் காயத்திரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா, ரைசா ரைஸ், சக்தி எக் மசாலா, சினேகன்- 65, ஜூலி ஜூஸ் உள்ளது.

இவை அனைத்து ரூ.200 மட்டுமே என்று ஒரு உணவகத்தில் இருந்த போர்டின் புகைப்படத்தை காயத்ரி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

6540 total views