ஓவியாவிற்கு புகழ் பெற தகுதி இல்லை ஜூலி; ஜூலியை விட்டுருங்க ஓவியா.

Report
819Shares

தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்ததை அடுத்து அதில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் சில பத்திரிகைகளிற்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு தான் அதிக புகழ் மற்றும் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், அவர் தற்போது பல ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அதே போல ஜூலி, காயத்ரியின் பெயர் பயங்கரமாக கெட்டு விட்டது. ஜூலி எங்கே சென்றாலும் அவரை ஓவியாவின் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் ஓவியா ரசிகர்களிடம் ஓவியா விடுத்த வேண்டுகோள்: யாரும் ஜூலியை கஷ்டப்படுத்தாதீங்க என்று தான். இதுமட்டுமின்றி ஜுலியை கலாய்த்து வரும் ரசிகர்களுக்கு ஆரவ்-வும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சக்தியும் ஜூலிக்கு உதவ வேண்டும் என்றும், ஒரு கதையில் அவருக்கு நடிக்க வாய்ப்பளிக்க போவதாகவும் ஒரு பேட்டியில் சக்தி தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு பேட்டியில் ஜூலி ஓவியாவிற்கு, அவரது ரசிகர்களை மதிக்க தெரியவில்லை. யாருக்கு புகழ் பெற தகுதி இல்லையோ அவருக்கு தான் புகழ் கிடைக்கிறது.

என்று கூறினார். ஆனால் ஓவியா ஜூலியை கஷ்டப்படுத்தாதீங்க என்று அவரது ரசிகர்களிடம் கேட்டு வருகிறார்.

இதில் தெரியும் இருவரின் முகம். "என்றும் ஓவியா..! ஓவியா தான்".

30662 total views