| பாலச்சந்தர் இயக்கத்தில் மீண்டும் ‘மன்மதலீலை’ |
| [ Saturday, 15 August 2009, 03:00.19 PM GMT +05:30 ] |
பன்றிக்காய்ச்சலை விடவும் தமிழ்சினிமாவில் வேகமாக பரவிவரும் ரீமேக், ரீமிக்ஸ் வியாதியை கட்டுப்படுத்தும் நிலை கைமீறி போயுள்ளது. |
தனது இயக்கத்தில் வெளிவந்த ’மன்மதலீலை’ படத்தின் தலைப்பை பயன்படுத்துவதற்கு தடா போட்டுள்ளார் பாலச்சந்தர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலசந்தர் இயக்கிய படம் ‘மன்மதலீலை’. இந்தப் படத்தை பால சந்தரே ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் பிரியங்கா புரெடக்ஷன் என்ற நிறுவனம் ‘மன்மதலீலை’ என்ற தலைப்பில் ஒரு படம் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மங்கை அரிராஜன் இயக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சாவ்லா, மோனிகா, தேஜாஸ்ரீ, அசஷ்யா, ராதிகா மல்கோத்ரா என 5ஹீரொயின்கள் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கே.பாலச்சந்தரிடம் கேட்டபோது ‘மன்மதலீலை’ தலைப்பை பயன்படுத்த அனுமதி கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. யாருக்கும் நான் அனுமதியும் வழங்கவில்லை. மீண்டும் ‘மதமதலீலை’ தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். நானே அந்த படத்தை ரீமேக் செய்வேன் என்றார். |
| முன்செல்ல |
|