Viduppu.com

வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்
[ Saturday, 15 August 2009, 02:55.33 PM GMT +05:30 ]
ஹீரோ அளவுக்கு வடிவேலுவின் ஓபனிங் சீனுக்கும் பில்டப் கொடுக்கும் அளவுக்கு அவரது காமெடி பிரசித்தம் பெற்றுவிட்டது. 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் வடிவேலு வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் வெடி வெடிப்பதுபோல உருவாக்கியுள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் திரைவண்ணன் கூறியதாவது :-

"ரொம்பநாள் கழிச்சு ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாரி என்ற கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். பெயருக்கு ஏற்ப தன்னிடம் உள்ளதை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அதை சாதகமாக்கிக் கொள்ள திட்டமிடும் வில்லன் சக்ரவர்த்தி, அவரது காதலி பூனம் பஜ்வாவை கேட்பார். காதலியை ஹீரோ விட்டுத்தருகிறாரா என்பதே கதை. 75 சதவீதம் படம் முடிந்திருக்கிறது. சென்னையில் கோத்தாரி மில்லில் க்ளைமாக்ஸ் காட்சி படமாகிறது. வில்லனுடன் வசனம் பேசியபடியே ஜீவா மோதும் வித்தியாசமான சண்டை காட்சி அமைக்கிறார் அறிமுக ஸ்டண்ட் இயக்குனர் 'பில்லா' ஜெகன். விரைவில் ஜெய்ப்பூரில் பாடல் காட்சி படமாகிறது.

தீபாவளி என்னும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். தீபாவளி அன்று பிறந்ததால் தனது பெயரை தீபாவளி என்று வைத்துக்கொள்கிறார் வடிவேலு. தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பில்டப்பிற்காக வெடி வெடித்த பிறகுதான் வருவார். இதற்காக பண்டல் பண்டலாக பட்டாசு வாங்குகிறோம். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

Copyright 2005-07 Viduppu.com, All rights reserved.