| ஷங்கர் : எந்திரனிலிருந்து இதயத்துக்கு |
| [ Sunday, 07 February 2010, 06:52.35 PM GMT +05:30 ] |
ஷங்கர் முதலில் உருவாக்கி வைத்திருந்தது ஒரு மென்மையான காதல் கதை. மயிலு என்று அந்தக் கதைக்கு பெயரும் வைத்திருந்தார். |
ஆனால், ஜென்டில்மேன் படம் முதலில் வரவே ஷங்கரின் சினிமா கேரியர் திசை மாறியது. பிரமாண்டங்களின் பிரம்மாவானார் அவர்.
ஒவ்வொரு பிரமாண்டப் படத்தை முடித்து நிமிரும்போதும் மயிலு ஷங்கரின் மனதில் நிழலாடும். அதை எப்படியும் படமாக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் பேட்டியளிப்பார்.
ஆயினும், ஷங்கர் படம் என்றால் தார் ரோட்டுக்கு பெயிண்ட் அடிப்பார், பானை வயிற்றில் படம் வரைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதால், மயிலு இன்னும் ஃபிலிமுக்கு இடம் மாறாமலேயே இருக்கிறது.
எந்திரன் என்ற மிகப் பிரமாண்டப் படத்துக்குப் பிறகு மென்மையான காதல் கதையை இயக்குகிறார் ஷங்கர். ஹெவி மீல்சுக்குப் பிறகு லைட்டாக ஏதாவது எடுத்துக் கொள்வோமே, அது மாதிரி.
இது அவர் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் மயிலு கதையா என்பது தெரியாது. மயிலாக இருக்காது என்பதே அவருக்கு நெருக்கமானவர்கள் தரும் விளக்கம்.
பாய்ஸ் படத்தில் நடித்த சித்தார்த் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இது இன்றைய நிலவரம். எந்திரன் மாதிரி இன்னொரு ஹெவி மீல்ஸ் கிடைத்தால் காதல் கதைக்கு அவர் குட்பை சொல்லக் கூடும்.
யானைக்கு எறும்பைவிட கரும்புதானே முக்கியம். |
| முன்செல்ல |
|