ரஜினி கட்சியின் முக்கிய கொள்கை என்ன தெரியுமா?

Report
85Shares

ரஜினி கட்சியின் முக்கிய கொள்கைகளாக நதி நீர் இணைப்பு, காவிரி விவகாரம் உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அதில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி ஆரம்பிக்கும் ரஜினி அவரது கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை அறிவிக்கவில்லையே என்று விமர்சனங்கள் வந்தன.

ரஜினி கட்சிக்கு சிறப்பு நிபுணர் குழுவை வைத்து கொள்கை, திட்டங்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நதநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி விவகாரமானது தமிழகம், கர்நாடகம் இடையே பூதாகரமாக உள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புகள் வெறும் ஏட்டளவிலே உள்ளது. எனவே ரஜினி கட்சி ஆரம்பித்ததும் இந்த காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளை சந்தித்து தீர்வு காண முடிவு செய்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதும் தலையாய கடமையாக ரஜினி வைத்துள்ளார். மேலும் அவர்களால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது போலவும் அவரது திட்டங்கள் இருக்கும்.

தமிழக மக்கள் தண்ணீருக்காக எந்த மாநிலத்திடமும் கையேந்தும் நிலை ஏற்படக் கூடாது என்பதில் ரஜினி மிகவும் உறுதியாக இருக்கிறார்.

எனவே ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளின் ஆரம்ப காலத்தில் இருந்த உண்மையான பாதையை கண்டுபிடித்து அவ்வழியாக நீரை கொண்டு வருவது உள்ளிட்ட திட்டங்களை அவர் வைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தண்ணீர் வந்துவிட்டால் விவசாயம் செழிக்கும் என்பது ரஜினியின் திட்டமாகும்.

3603 total views