நடிகை அனுஷ்கா பட பிரபலம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

Report
17Shares

பிரபல இயக்குனரும், வசனகர்த்தாவுமான ராஜசிம்ஹா அதிகளவிலான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ருத்ரமாதேவி திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் ராஜசிம்ஹா.

இவர் ஓகா அம்மாயி தபா என்னும் தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய நிலையில் தமிழிலும் கதாசிரியராக ஆக முயன்று வந்தார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள வீட்டில் ராஜசிம்ஹா அதிகளவிலான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தனது பணி சம்மந்தமான விடயத்தில் பிரச்சனை இருந்ததால் அவர் ஓராண்டுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட ராஜசிம்ஹாவின் தற்போதைய உடல்நிலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

1627 total views