அனுஷ்கா கட்டாயப்படுத்தப்பட்டாரா?

Report
170Shares

தான் நடிக்கும் படங்களில் ஆபாச உடைகள் அணிய இயக்குனர் கட்டாயப்படுத்தினார்களா என்ற கேள்விக்கு அனுஷ்கா பதிலளித்துள்ளார்.

அனுஷ்கா நடித்த பாகமதி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் ரூ.30 கோடியை தாண்டி உள்ளது. பாகமதி படத்தை பார்த்து ரஜினிகாந்தும் அனுஷ்காவை பாராட்டி இருக்கிறார். சினிமா அனுபவங்கள் பற்றி அனுஷ்கா சொல்கிறார்

“வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் இருக்க கூடாது. எப்போதும் நேர்மறையாக சிந்தித்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நமது பலகீனங்களிலும் பலம் இருக்கிறது என்று நம்ப வேண்டும். எனக்கு பலகீனங்கள்தான் அதிகமாக உள்ளது. ஆனாலும் நிறைய நல்லதுதான் நடந்து இருக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளில் என்னால் கவனம் செலுத்த முடியாது. ஆனால் சிலர் நான்கைந்து வேலைகளை ஒரே சமயத்தில் எளிதாக செய்து முடித்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். அதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தாலும் நான் எனது பாணியில் முன்னேறி போய்க்கொண்டே இருக்கிறேன்.

ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்வதால் அதில் முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது. இதன் மூலம் அந்த வேலையை பரிபூரணமாக செய்ய முடியும் என்பது எனது கருத்து. புதிது புதிதாக வரும் ‘பேஷன்’களை நான் கண்டு கொள்ள மாட்டேன். இப்போது என்ன மாதிரியான நாகரிக ஆடைகள் புழக்கத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் ஆர்வப்பட மாட்டேன்.

எனக்கு பிடித்த உடைகளை மட்டுமே அணிகிறேன். சினிமாவில் எனக்கு உடை தயார் செய்யும் முடிவை இயக்குனரிடம் விட்டு விடுவேன். அவர் நவீன நாகரிகத்துக்கு ஏற்றார்போல் ஆடைகளை வடிவமைத்து தருவதை அணிந்து கொண்டு நடிப்பேன். ஆபாச ஆடைகள் அணியச் சொல்லி இதுவரை எந்த டைரக்டரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. அதுமாதிரியான கதையம்சம் உள்ள படங்களும் எனக்கு வரவில்லை.

7806 total views