பகல்நிலவு தொடரில் இனி செய்யத், சமீரா இல்லை

Report
169Shares

பெரியதிரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களிற்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சமீரா ஷெரிப் மற்றும் செய்யத் அன்வர் இரண்டு சீரியலில் வெவ்வேறு தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் உண்மை வாழ்க்கையிலும் காதலர்கள் என்பதால் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் உண்டு. இருவருக்கும் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவ்வப்போது அவர்களது ரசிகர்களுடன் உரையாட முகநூலில் லைவ் வருவார்கள்.

அந்த வகையில் பார்த்தால் சில நாட்களாகவே இவர்கள் இருவரும் பகல்நிலவு சீரியலில் எந்த காட்சிகளிலும் தோன்றவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து வந்த நிலையில் தற்போது நடிகை சமீரா அவர்கள் இருவரும் இனி நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்து அந்த தொலைக்காட்சியை விட்டு விலகிவிட்டார்களாம்.

இந்த செய்தியை சமீராவே கூறியதாக சொல்லப்படுகிறது. நிறைய பிரச்சனைகள் எழுவதால் இருவரும் தொலைக்காட்சியை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை கேட்ட அவர்களது ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள்.

8279 total views