10-ம் வகுப்பு படிக்கும் போதே கருவை கலைத்த முக்கிய நடிகை!

Report
918Shares

10-ம் வகுப்பு படிக்கும்போதே கர்ப்பம் அடைந்த பெண்ணாக சவாலான வேடம் ஏற்று நடித்துள்ளார் அணிக்ஹா.

இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'மா' என்னும் குறும்படத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் போதே காதலினால் கர்பமடையும் பெண்ணாக நடித்துள்ளார் அணிக்ஹா.

இவர் ஏற்கனவே கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்துள்ளார்.

படத்தின் கதை: படத்தில் அணிக்ஹா-வின் தந்தை கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றுகிறார். அம்மா நூலகத்தில் வேலை செய்பவர். கண்டிப்பானவராக இருந்தாலும், மகளின் தேவையை அறிந்து நடந்துகொள்ளும் தாய்.

10 வகுப்பு படிக்கும் அணிக்ஹாவிற்கு போர்டு எக்ஸாம் போன்ற பல கல்வி சுமைகள் இருந்தாலும், அவருக்கு ஹாக்கி பிடிக்கும் என்பதால் அவரை விளையாட அனுமதிக்கிறார் அவரது அம்மா.

ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும் போது மயங்கிவிழ, உடலில் சத்து இல்லை என நினைத்து, சத்தான உணவு கொடுக்கும்படி அணிக்ஹாவின் மாஸ்டர் கூறுகிறார்.

ஆனால் வீட்டிற்கு செல்வதற்குள் அணிக்ஹா வாந்தி எடுக்க, மருத்துவமனைக்கு செல்லலாம் என அவரது அம்மா அழைக்கிறார். பல்வேறு குழப்பங்களுக்கு இடையே அணிக்ஹா தான் கர்பமாக இருப்பதாக நினைக்கிறன் என அம்மாவிடம் கூற, ஒரு நிமிடம் அவர் குழம்பிப்போய் தன்னுடைய மகளை கோபத்தில் அடிக்கிறார்.

ஒரு கட்டத்தில் தவறு நடந்து விட்டது அடுத்து இதை எப்படி சமாளிக்கலாம் என யோசிக்கும் அவர், பெண்ணிடம் இது குறித்து பேசுகிறார்.

பெண்ணின் காதலனிடமும் இது குறித்து பேசுகிறார். இவர்கள் இருவருக்கும் காதல் இல்லை, இனக்கவர்ச்சி மூலம் இந்த தவறு அவர்களே அறிமாமல் செய்தது என உணர்ந்து தன்னை சமாதன படுத்திக்கொள்கிறார்.

10 ஆம் வகுப்பு படிக்கும்போது கர்ப்பமாக இருக்கும் அணிக்ஹா பின் விளைவுகள் என்ன வரும் என்று எதுவும் தெரியாமல், அம்மாவிடம் வந்து அம்மா எனக்கு தம்பி பாப்பா இல்ல இந்த பாப்பாவ ஏன் நம்ப வச்சிக்க கூடாது என்பதிலும், சுடிதார் எனக்கு ரொம்ப டைட்டா ஆகிடுச்சிமா இல்ல, என குழந்தை தனமாக தன்னுடைய தாய்மை வெளிபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், தன்னுடைய மகளிடம் இந்த குழந்தை வேண்டாம் என புரிய வைத்து, மருத்துவமனைக்கு சென்று கருவை கலைக்கிறார். அப்போது மருத்துவரிடம் டாக்டர் பாத்து வலிக்காம என கூறி தன்னுடைய பெண்ணின் மேல் உள்ள பாசத்தை வெளிபடுத்தியுள்ளார் அணிக்ஹா-வின் அம்மா.

தன்னுடைய பெண் மீது நம்பிக்கை வைத்து. "நீ செய்த தவறை நினைத்து இனி வீட்டில் முடங்கி கிடக்க கூடாது" என கூறி அணிக்ஹாவிற்கு பிடித்த விளையாட்டான ஹாக்கி தளத்திற்கு கொண்டு வந்து விடுகிறார். அங்கு அணிக்ஹாவின் கர்ப்பத்திற்கு காரணமான மாணவரும் உள்ளார்.

"இருப்பினும் உன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என கூறி சிறந்த அம்மாவாக அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் அம்'மா'.

29598 total views