கலைஞர் தொலைக்காட்சியில் 30 லட்சம் சம்பளம் வாங்கும் ஜூலி..?

Report
464Shares

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளியான ஜூலி, 30 லட்சம் சம்பளம் வாங்குவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 19 பிரபலங்களில் மக்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை என கூறியிருந்தார்.

அதேபோல் இவர் சமீபத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டரும் கோகுலும் நடுவர்களாக உள்ளனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவதற்காக ஜூலிக்கான சம்பளம் என்ன என்ற தகவல் கசிந்து வைரலாகி வருகிறது, நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க மாதம் 10 லட்சம் என 3 மாதங்களுக்கு 30 லட்சம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

15395 total views