சதாவை விபச்சாரத்திற்கு அழைத்த மெட்ராஸ் பட நடிகை !!

Report
3556Shares

மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் ரித்விகா. அந்த படத்திற்கு பிறகு கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடை யாது, ஒருநாள் கூத்து, இருமுகன் என பல படங்களில் நடித்த ரித்விகாவிற்கு கதாநாயகி வாய்ப்புகளும் தேடிச்சென்றன.

ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்ததால் வாய்ப்புகள் போன வேகத்திலேயே திரும்பி விட்டன. ரித்விகா, தற்போது சதா கதையின் நாயகியாக நடித்து வரும் டார்ச்லைட் என்ற படத்தில் விலைமாது வேடத்தில் நடித்திருக்கிறார்.

பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் சதாவை சிகப்பு விளக்கு ஏரியாவுக்கு அழைத்து செல்வதே இவர் தானாம். அந்த வகையில், ரித்விகாவின் கேரக்டருக்கும் ஒரு கலங்க வைக்கும் பிளாஷ்பேக் உள்ளதாம்.

அதனால் மெட்ராஸ் படத்திற்கு பிறகு இந்த படம் தன்னை பெரிதாக பேசவைக்கும் என்று எதிர்பார்க்கிறார் ரித்விகா.

112118 total views