அஜீத்துடன் அமலாபால்!

Report
246Shares

விக்ரம், விஜய்யுடன் இணைந்து நடித்து விட்டதாகவும் இனி அஜீத்துடன் நடிக்க விரும்புவதாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை அமலாபால். தமிழில் இவரது நடிப்பில் உருவான ‘விஐபி 2’ படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த இரசிகர்களும் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் அமலாபாலிடம் பெரிய நடிகர்களுடன் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர்கள் விக்ரம், விஜய்யுடன் இணைந்து நடித்து விட்டேன்.

இதற்கு முன்னரே அஜீத்துடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது, சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. விரைவில் அவருடன் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்

10870 total views