நர்ஸ் வேலையில் இருந்தும் ஜூலி அதிரடி நீக்கம்..! அடுத்தடுத்து துரத்தும் சோதனை…!!

Report
1173Shares

நர்ஸ் வேலையில் இருந்தும் ஜூலி அதிரடி நீக்கம் Big Boss Julie Dismiss. அடுத்தடுத்து துரத்தும் சோதனை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜூலிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டாலும், அவர்தான் இன்றைய ஹாட் டாபிக்காக இருக்கிறார்.

அவரை பற்றி எந்த செய்திகள் போட்டாலும் அது தொலைக்காட்சிகளின் டிஆர்பியை எகிற வைத்து விடும். எனவே அவரிடம் பேட்டி வாங்க சேனல்கள் போட்டி போட்டு தேடி வருகின்றன. அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என கூறுகின்றனர்.

ஆனால் அவர் பத்திரமாக தோழிகளின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் உண்மை.

ஒருவேளை அவர் நர்சாக இருந்த மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றிருக்கலாம் என கருதி போன் செய்து கேட்கப்பட்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ ஜூலியை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்து உள்ளது.

அதாவது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வரை நர்ஸ் வேலையில் இருந்துள்ளார். எப்போது அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் கெட்ட பெயர் ஏற்பட்டதோ அந்த நிமிடமே வேலையில் இருந்து நீக்கி விட்டது.

மேலும் வேலை செய்த மருத்துவமனையின் பெயரை வெளியிட வேண்டாம். தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

48292 total views