என் மூன்று குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறேன்!

Report
2946Shares

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரும் அறிந்ததே. கார்த்திக் தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கார்த்திக் தற்கொலைக்கு மைனாவும் காரணம் என்றும், நந்தினிக்கு ஏற்கனவே அபார்ஷன் நடந்ததாகவும் கார்த்திக்கின் தாயார் குற்றம் சாட்டியிருந்தார்

இந்நிலையில் நடிகை நந்தினி பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கணவர் தற்கொலை செய்தவுடன் தானும் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்றும் ஆனால் தன்னை நம்பி இருக்கும் மூன்று குழந்தைகளுக்காக உயிர் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

என் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட உடனேயே நானும் தற்கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை நம்பி என் பெற்றோர், தம்பி உள்ளார்கள்.

என் பெற்றோர், தம்பியை தவிக்க விட்டு செல்ல விரும்பவில்லை. அவர்கள் மூவரும் என் பிள்ளைகள் போன்று. அந்த பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. அதனால் தற்கொலை செய்யவில்லை.

என் வீட்டில் உள்ள மூன்று குழந்தைகளுக்காக நான் இன்னும் சில காலம் ஓடியாடி உழைக்க வேண்டியிருக்கிறது. மீடியாவில் இருப்பதால், குடும்பப் பிரச்னைகளை எல்லாம் மூடி மறைத்துக்கொண்டு… பல இடங்களில் கட்டாயமாக சிரிக்க வேண்டி இருக்கிறது.

ஆடிப்பாடி, சிரித்து நடிக்க வேண்டியிருக்கிறது. அதையும் நான் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை. ஒரு பெண்ணுக்கு உள்ள சராசரி வலிகளும், வருத்தங்களும் எனக்கும் இருக்கிறது.

மன வலி, உடல் வலிகளுடன் போராடுகிறேன். என்னைத் தயவு செய்து ஒரு நடிகையாகப் பார்க்காதீர்கள். என்னை ஒரு பெண்ணாகப் பாருங்கள். என் வலிகளும், வருத்தங்களும் உங்களுக்கும் புரியும்” என்று கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

91464 total views