மீண்டும் ரொமன்ஸில் களம் இறங்கிய விக்னேஷ்-நயன்...வைரலாகும் புகைப்படம்

Report
29Shares

நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். அங்கு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு நயன்தாரா அவரை ஸ்பெஷலாக வாழ்த்துவதும், நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் அவரைக் கொஞ்சுவதுமாக ட்விட்டர் முழுக்க இவர்களது ரொமான்ஸ் வைரலாகும்.

நேற்று ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருக்கிறார்கள் விக்னேஷ் சிவனும், நயன் தாராவும். அங்கிருந்து கிளம்பும்போது, நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார் விக்கி.

கடந்த மாதம் காதலர் தினத்துக்கு அடுத்த நாள், விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தை அப்லோடு செய்தார் நயன். சமீபமாக, ரசிகர்கள் பலரும் கல்யாணம் எப்போ எனத்தான் ரிப்ளைகளில் அதிகமாகக் கேட்டு வருகிறார்கள்.

957 total views