லட்சுமி குறும்பட இயக்குனரின் திரைப்படத்தில் நயன்தாரா: படத்தின் கதை இதுதானாம்!!

Report
19Shares

சில மாதங்களுக்கு முன் இணையத்தில் சர்ச்சையான விவாதங்களைக் கிளப்பிய 'லட்சுமி' குறும்படத்தின் இயக்குநரின் இயக்கத்தில், நயன்தாரா நடிக்க உள்ள திரைப்படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய இயக்கத்தில் 'மா' என்ற புதிய குறும்படம் ஒன்று வெளியானது. வளர் இளம் பருவ பெண் எதிர்கொள்ளும் கர்ப்பம் ஒன்றிணைப் பற்றிய இந்த குறும்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் சார்ஜுனின் புதிய படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் கதை என்ன என்பது குறித்து, இயக்குநர் சர்ஜுன் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

சுமார் ஒரு மணி நேரம் கதை கேட்ட நயன்தாரா படத்தில் நடிக்க சம்மதித்தார். அத்துடன் எனது குறும்படமான 'மா' திரைப்படத்தினை தான் பார்த்ததாகவும், மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

புதிய படமானது ஒரு முழுமையான திகில்படமாக உருவாக உள்ளது. சில சமீபத்திய படங்கள் போல் காமெடி கலந்த திகில் படமாக இல்லாமல், சீரியஸான திகில்படமாக இருக்கும்.

இதர நடிகர் நடிகைகள் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

757 total views