விஜய்யின் அரசியல் குறித்து தந்தை எஸ்.ஏ.சி வெளியிட்ட தகவல்..!

Report
71Shares

இந்த அரசியல் லிஸ்டில் ஏற்கனவே கிசுகிசுக்கப் பட்டவர் நடிகர் விஜய். ஆனால் தற்போது வரை இது விஜய்யின் தந்தையுடைய ஆசையாக தான் இருக்கின்றதே தவிர விஜய் இது குறித்து மௌனம் சாதித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனரும்மான எஸ்.ஏ.சி கொடுத்துள்ள பேட்டியில், விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணன் தனக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது அரசியலில் பணம் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதனால் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் தற்போது ரஜினி, கமல், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளனர். எனவே விஜய்யும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என மீடியாக்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அரசியலில் இனி விஜய் வருவதும் வராமல் இருப்பதும் அவருடைய விருப்பம் என்றும் ஏற்கனவே நான், அவருக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்து விட்டேன்.அதனால் இனி எதுவாக இருந்தாலும் அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2764 total views