கல்லூரி மாணவிகளுடன் பிக்பாஸ் ஆரவ் !! ஒரே ஜாலி தான்..

Report
88Shares

மாடலாக தனது பணியைத் துவங்கி, தற்போது பெயரிடப் படாத படம் ஒன்றில், ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ள ஆரவ், சென்னையில் அமைந்துள்ள பிரபல கல்லூரியில் மாணவிகள் கொண்டாடிய சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது தமிழர்களின் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் 'வேஷ்டி சட்டை' அணிந்து மாட்டு வண்டியில் கல்லூரி மாணவிகளுடன் குதூகலமாக இந்தப் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

ஆரவ் மாடலாக இருந்த போது மிகவும் பிரபலமாகவில்லை என்றாலும் இவர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடினார். அதே போல் அவர், மருத்துவ முத்தத்திற்கு பெயர் போனவர் என்பது குறிபிடத்தக்கது.

கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் அனைவரும், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், குறத்தி ஆட்டம், கோலாட்டம்... போன்றவற்றை ஆடி மகிழ்ந்தனர்.

4026 total views