மீண்டும் பிக்பாஸ் வீடா? அலறி அடித்து ஓடும் பிக்பாஸ் பிரபலம்

Report
51Shares

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வைல் கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்து எதற்கும் டென்ஷனாகாமல் பொறுமையாக இருந்து ரசிகர்களை கவர்ந்தவர் பிந்து மாதவி. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது மார்க்கெட் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு வாய்ப்புகள் வர தொடங்கியது.

பிந்து தற்போது அருள் நிதியுடன் சேர்ந்து புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் 2 போட்டியாளர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். நீங்கள் நீங்களாகேவ இருந்தால் போதும் வெற்றி பெற்று விடலாம் என கூறியுள்ளார்.

மேலும் இரண்டாவது சீசனிற்கு அழைத்தால் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வீர்களா? என கேட்டதற்கு மீண்டும் பிக் பாஸ் வீடா வேண்டாம் என அலறி அடித்து ஓடியுள்ளார். விருந்தாளியாக வேண்டுமானால் போவேன் எனவும் கூறியுள்ளார்.

1760 total views