குணச்சித்திரம் மற்றும் காமெடியில் கலக்கிய மணிவண்ணன் மகன் யார் தெரியுமா? அட இந்த ஹீரோ தானா!! புகைப்படம் உள்ளே

Report
882Shares

நடிகர் மணிவண்ணன் தனது நடிப்பின் திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

இன்னும் சில காலம் இந்த நடிகர் நம்முடன் இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் மணிவண்ணன். ஜோதி என்ற ஒரு படத்தின் மூலம் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் ‘நூறாவது நாள்’ என்கிற ஒரு செம்ம படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பினார். இயக்கம் மட்டுமில்லாது நடிப்பிலும் அசாத்திய திறமை பெற்றவர் மணிவண்ணன்.

மணிவண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகள் மற்றும் மகன் . மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த நடித்த கோரிப்பாளையம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார்.

மேலும் சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார். தற்போது தனது அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்தினை மீண்டும் இயக்கி வருகிறார்.

இவரது பிரிவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு தான். அவரது மகன் அவரது இடத்தை நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

36681 total views