வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா ராய்...?

Report
1411Shares

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆனதிலிருந்து, மாமனார் அமிதாப் பச்சன் மாமியார் ஜெயா பச்சனுடன் கூட்டுக் குடும்பமாக, அமிதாப்பின் பங்களாவான ஜல்சாவில் வசித்து வருகிறார்.

மாமியார் மருமகள் பிரச்சனை என்பது தொன்றுதொட்டு வளர்ந்து வரும் ஒன்று. அதற்கு உலக அழகி மட்டும் விதிவிலக்கா என்ன.

சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் மாமியார் ஜெயாவிற்கும், மருமகள் ஐஸ்க்கும் முட்டிக் கொள்ள, விளைவு வீட்டை விட்டு வெளியேறக் கூடிய நிலைக்கு வந்திருக்கிறது. போதாக் குறைக்கு நாத்தனாரிடமும் டிஷ்யூம் போட்டிருக்கிறார் ஐஸ்.

சில நாட்களுக்கு முன்புதான் அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து மும்பையில் 21 கோடி ரூபாய்க்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளனர். தனது கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா தனிக்குடித்தனம் போகப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இது எல்லாமே வெறும் செய்திதான் என்றும் ஐஸ் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் பின்னால் உள்ள முக்கிய காரணம் அபிஷேக்கிற்கு பெற்றோர் என்றால் மிகவும் பிடிக்கும். எந்த காரணத்திற்காகவும் அவர் பெற்றோரை விட்டு பிரிய மாட்டார். இது நம்ம ஐஸ்க்கும் நன்றாக தெரியும் எனவே இவர் தனியாக செல்ல மாட்டார்.

மேலும் அந்த புதிய அபார்ட்மென்டை முதலீட்டுக்காக வாங்கியள்ளனர் என்றும் கூறப்படுகிறது..

ஐஸ்வர்யாவிற்கு முன்பு கரிஷ்மா கபூருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் கரிஷ்மா தனிக்குடித்தனம் போக விரும்பியதால் திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது. பச்சன் குடும்பத்தில் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

46042 total views