தல அஜித் மெகாஹிட் படத்தில் அருவி அதிதி: வைரலாகும் புகைப்படம்
Reportகடந்த வருடம் வெளியான படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படங்களில் அருவி முக்கியமான இடத்தை பிடித்தது.
அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
தற்போது அதிதி அளித்த பேட்டி ஒன்றில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் கவுதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தில் இருந்து அதிதியின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.