விஜய் பற்றி இப்படியா கூறினார் அதுல்யா..!

Report
75Shares

தமிழில் அஜித் நடித்த முகவரி, தொட்டி ஜெயா, காதல் சடு குடு, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கியவர், வி.இசட். துரை, இவரது இயக்கத்தில் உருவாகிய படம் தான் ஏமாலி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷ்னி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம், இன்றைய இளம் தலைமுறையினர் காதலையும், காமத்தையும் எப்படி பார்க்கிறார்கள் என்பது மாதிரியான கதை தான். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார் அதுல்யா. இந்த படத்திற்காக அவரது ரசிகர்களிடம் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அதுல்யா.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு பேட்டியில், நான் நடிகை என்பதை தாண்டி முதலில் இளைய தளபதி விஜய்யின் ரசிகை என்று கூறியுள்ளார். விஜய்யின் நடனம் ஆடும் திறன் மிகவும் பிடிக்கும் என்று கூறினார். மேலும், விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் கூறினார் அதுல்யா. அதைத்தொடர்ந்து, இவர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது எனது கனவு என்றும் கூறியுள்ளார்.

3166 total views