பரபரப்பை கிளப்பிய “அருவி” படம்

Report
129Shares

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் பாபு தயாரிக்கும் படம் அருவி. புதுமுக இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். அதிதி பாலன், லட்சுமி கோபாலசாமி, ஸ்வேதா ஷேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

அருவி படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. பெண் கடவுள் அலங்காரத்தில் ஒரு பெண் கையில் எந்திர துப்பாக்கியோடு இருப்பது போல் அருவி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தது.

போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் “பாரத மாதா“ கையில் துப்பாக்கியோடு இருக்கிறார் என்றும், பெண் கடவுள் கையில் துப்பாக்கியை கொடுக்கலாமா என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர். ஒரு பெண் பீர் பாட்டிலை கொண்டு சுருட்டு பிடிப்பது போல ஒரு புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் அருவி டீஸர் சமூகவலைதளங்களில் வெளிவந்து மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கிறது. வழக்கமாக படத்தில் தான் அதிக பீப் காட்சிகள் இடம்பெறும். ஆனால் அருவி டீஸரே பல இடங்களில் பீப்புடன் வெளிவந்துள்ளது.

டீஸரில் தீவிரவாதி அருவியை விசாரிக்கும் அதிகாரி “ “ அல்லுமாவா…. மாவோஸ்டா… நக்ஸசல்பாரியா ? என்பது போலும். டீஸரின் முடிவில் அருவி “ கை வை பார்ப்போம் “ என்று கூறுவது போல் டீஸர் முடிகிறது.

அருவி டீஸர் மற்றும் பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில்திரையிடப்பட்ட அருவி வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

4971 total views