பெண்ணுக்கு பாலியல் கொடுமை பாகுபலி பட நடிகர் கைது! பாதிக்கப்பட்ட பெண்ணின் மூலம் பல வருட கூத்து அம்பலம்

Report
457Shares

பாகுபலி சினிமா வரலாற்றில் பெரும் தாக்கத்தை தாக்கத்தை உண்டாக்கிய படம். இரண்டு பாகமாக வந்த இப்படத்தின் மீதான ஈர்ப்பு இன்னமும் குறையவில்லை.

இதில் சிவடு பிரபாஸ்க்கு வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வேங்கடேச பிரசாத். ஹைதாரபாத்திலுள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஐமாக்ஸின் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

அங்கு வேலைசெய்யும் பெண்ணை பாலியல் ரீதியாக பல வருடமாக துன்புறுத்தியுள்ளார். இதனால் தற்போது அப்பெண் அளித்த புகார் அடிப்படையில் கைது அவர் செய்யப்பட்டுள்ளார்.

போலிஸ் விசாரணையில் அவரின் லீலைகள் அம்பலமாகியுள்ளது. இதில் பிரசாத் 7 வருடங்களாக அப்பெண்ணுடன் உறவு வைத்துள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு இருமுறை கரு உண்டாகியுள்ளது.

இருமுறையும் அக்கருவை கலைக்க சொல்லி அவர் மிரட்டியுள்ளார். எனவெ அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இதே போல தொடர்பு வைத்துள்ளதாகவும் புகாரில் சொல்லப்பட்டுள்ளது.

18497 total views