விஜய் யேசுதாஸை நடிக்க வைத்து அழகு பார்த்தார் தனுஷ்.

Report
174Shares

நடிகர் தனுஷும், பிரபல பாடகர் விஜய் யேசுதாசும் நெருக்கமான நண்பர்கள். இதனால்தான், மாரி படத்தில் கூட ‘வேண்டாம், வேண்டாம்’ என ஒதுங்கிப் போன விஜய் யேசுதாஸை நடிக்க வைத்து அழகு பார்த்தார் தனுஷ்.

அவர் போட்ட பாதையில் முழு ஹீரோவாகவே பயணிக்க ஆரம்பித்துவிட்டார் விஜய் யேசுதாஸ்.

படைவீரன் என்ற படத்தில் இவர்தான் ஹீரோ. இந்த நேரத்தில்தான் தன் நட்புக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார் தனுஷ்.

அண்மையில் இப்படத்தை நேரம் ஒதுக்கிப் பார்த்தவர், “படம் நல்லாயிருக்கு. நானே என் பேனர்ல ரிலீஸ் பண்ணித் தர்றேன். கொஞ்சம் கூட கமிஷன் வேணாம். என்ன கலெக்ஷன் வருதோ,

அப்படியே உங்களுக்கு” என்று கூறியிருக்கிறாராம். இதைவிட வேறென்ன என்ன இருக்கு நட்பை வெளிப்படுத்த...

7712 total views