படம் பார்த்தால் சேலை இலவசம் !

Report
409Shares

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள மகளிர் மட்டும் படத்தை பார்க்கும் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் கடிதல் படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகளிர் மட்டும்.

எதிர்வரும் 15ஆம் திகதி திரைக்கு வரும் இந்த படத்தை திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும், ஒவ்வொரு காட்சியின் போதும், ஒரு பெண் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு புதிய சேலை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த விளம்பர நிகழ்ச்சி வரும் 15திகதி முதல் 17ஆம் திகதி வரை மட்டும் நடக்கவுள்ளது. பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், பெண் இரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், திருமணமான பெண்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

13716 total views