சிம்புவுக்கு திருமணம் நடக்க வேண்டுதல்: ரி.ஆர் திருப்பதியில் தரிசனம்

Report
146Shares

ரி.ஆர்.ராஜேந்தர் திருப்பதிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பிரார்த்தனை சிம்புவிற்கு திருமணம் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே என ஆலய தரிசனத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதில் கூறும் பொழுது அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பு தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் மிக விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றே இந்த பிரார்த்தனை என அவர் கூறியுள்ளார்.

ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் .

அந்த படத்தை அடுத்து கெட்டவன் கெட்டிடல் கிட்டிடும் ராஜஜோகம் படத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்படுகின்றது.

5574 total views