வெறுப்பை தாண்டியும் ஜூலிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா..!

Report
359Shares

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பற்றி சொன்ன ஒரு பொய், அவரை ரசிகர்கள் வெறுப்பதற்கு காரணமாகிவிட்டது.

அதன் பிறகு ஜூலி வீட்டில் இருந்து வெளியேறியபோது அவருக்கு சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி நேரிலும் மக்கள் வெறுப்பை காட்டினார்.

அது பற்றி இன்று பேசிய ஜூலி, “வெளியே போன பிறகு ஒரு வாரம் எங்குமே போக வில்லை வீட்டிலேயே தான் இருந்தேன், பின்னர் ஒரு நாள் தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு ஒரு கடைக்கு போன போது என்னை பார்க்க 300-400 பேர் கூடிவிட்டனர்.”

“சிலர் பொய் சொன்னேன் என்பது பற்றி பேசினாலும், பலரும் என்னுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர், சிலர் ‘நீங்கதானே அது’ என ஆர்வமுடன் கேட்டனர்,” என ஜூலி கூறினார்.

மேலும் சிலர் அவரை வீட்டுக்கே அழைத்துக்கொண்டு போய் ஜுஸ் கொடுத்து அன்பாக பேசினர். ”அதை பார்த்த என் நண்பர்களுக்கு மிகவும் சந்தோசமாக, பெறுமையாக இருந்தது” என ஜுலி கூறியுள்ளார்.

10862 total views