நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' கதை இதுதானா!!

Report
59Shares

தமிழ்த் திரையுலகின் சமீபத்திய பரபரப்பு 'கோலமாவு கோகிலா', சுருக்கமாக 'கோ கோ'.

நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தின் பெயர் இப்படி வித்தியாசமாக இருக்கிறதே என பட அறிவிப்பு வந்த போதே பேச வைத்த படம். சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள்.

சிம்பு நடிப்பில் உருவான 'வேட்டை மன்னன்' படத்தை இயக்கி நெல்சன் தான் இந்த 'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குனர். 'வேட்டை மன்னன்' டிராப் ஆகவில்லை, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உருவாகலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் இயக்குனர்.

நயன்தாராவிடம் கதையைப் பற்றிச் சொன்னதுமே ரசித்தவர், டைட்டிலைக் கேட்டதும் சிரித்திருக்கிறார். வித்தியாசமாக நன்றாகத்தானே இருக்கிறது எனவும் பாராட்டியிருக்கிறார்.

ஒரு வித்தியாசமான ஆக்ஷன் படமாம். கடத்தல் ஆட்களுடன் நயன்தாராவுக்கு திடீரென பழக்கம் ஏற்பட்டு அவர்கள் வட்டத்துக்குள் சிக்கி விடுகிறார். அதிலிருந்து எப்படி அவர் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.

கோலமாவுக்கும் படத்தின் கதைக்கும் மிக முக்கிய சம்பந்தம் இருக்கிறதாம், அதற்காகத்தான் அப்படி ஒரு தலைப்பாம்.இவ்வாறு கூறபடுகிறது.

2609 total views