நடிகை திவ்யா உண்ணி 2வது திருமணம்

Report
326Shares

மலையாள நடிகை திவ்யா உண்ணி, அமெரிக்க இன்ஜினியரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார். மலையாள திரை உலகில் 1990ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திவ்யா உண்ணி.

பிரணய வர்ணங்கள், ஒரு மரவத்தூர் கனவு, பிரண்ட்ஸ், ஆகாச கங்கா உள்பட 30 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆண்டான் அடிமை, வேதம், பாளையத்து அம்மன், சபாஷ் படங்களிலும் நடித்துள்ளார்.

இது தவிர கன்னடம், தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதீர்சேகரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறினார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர். முறைப்படி விவாகரத்தும் செய்து கொண்டனர்.

அதன்பிறகு திவ்யா உண்ணி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடனபள்ளி நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் திவ்யா உண்ணி நேற்று அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரியும் அருண்குமார் மணிகண்டன் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் ஹூஸ்டன் நகரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் நடந்தது. இந்த திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அருண்குமார் மணிகண்டன் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

12343 total views