சிறந்த சண்டை காட்சிகளோடு தயாராகும் விஜய்யின் 62 வது படம்..!

Report
29Shares

மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பவர் எ. ஆர். முருகதாஸ். இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார்.

மேலும், இந்த படத்தின் பாடல்களும் வித்யாசமாக அமையும் என்று படத்தின் இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். படத்தின் முதல் பாடல் அண்மையில் தான் எடுத்து முடித்தார்கள்.

மேலும், படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிற நிலையிலும், இன்னும் படத்திற்கு பெயர் அறிவிக்கப்படவில்லை. தற்போது சண்டை காட்சிகளை படப்பிடிப்பு எடுத்து வருகிறார்கள். சண்டை காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஷ்மனனை படத்தில் இணைத்துள்ளார்கள்.

இரட்டையர்களான இவர்கள் தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை காட்சிகளில் வேலை செய்தவர்கள்.

சென்னை E.C.R-ரில் தற்போதைய சண்டை காட்சிகள் படப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடக்கவிருக்கிறது.

1616 total views