திருமணம் ஆகவில்லை! குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் பிரபல நடிகை

Report
752Shares

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அனுஷ்கா. 2005-ல் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அனுஷ்கா, தன்னுடைய முதல் படத்திலேயே நாகர்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இதனையடுத்து, 2006-ல் தமிழ் சினிமாவில் ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் அடுத்தடுத்து, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி காதநாயகர்களுடன் நடித்து, தனக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார்.

பிரபல நடிகையாக இருந்தாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். அந்த வகையில் நடிகை அனுஷ்காவையும் பல நடிகர்களுடன் இணைத்து வைத்து கிசுகிசு வந்துகொண்டே இருந்தது. சமீபத்தில் கூட நடிகை அனுஷ்காவையும், பாகுபலி காதநாயகன் பிரபாஸையும் இணைத்து வைத்து விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை இருவருமே மறுத்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அனுஷ்கா பேட்டி அளிக்கையில், திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அனுஷ்கா, “திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்குப் பொருத்தமான ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை சரியான சமயத்தில் செய்வேன்.

எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது பெற்றோர் என்னை எப்போதும் கட்டாயப்படுத்தியதே இல்லை. என தெரிவித்துள்ளார்.

தற்போது 36 வயதான அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடித்த பாகமதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

26481 total views