அனுஷ்காவுக்கு குவியும் பாராட்டு!!

Report
70Shares

‘பாகமதி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை அனுஷ்காவை நடிகர்கள் உட்பட பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டி உள்ளார்.

”அவருடைய பாராட்டை என்னுடைய வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது ”என்று அனுஷ்கா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான ‘பாகமதி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மட்டுமின்றி இந்தத் திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

3062 total views