விஜய்யின் தீவிர ரசிகையாம் அதுல்யா!!

Report
23Shares

”நான் முதலில் விஜய் ரசிகை அதன் பிறகே நடிகை ”என்று தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே படம் மூலம் நடிகையானவர் கோவையை சேர்ந்த அதுல்யா ரவி.

துரை இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஏமாளி படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

”நான் முதலில் விஜய் ரசிகை, அதன் பிறகே நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்” என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் எல்லாம் நான் விஜய் ரசிகை, அஜீத் ரசிகை அவர்களுடன் சேர்ந்து நடிக்க காத்திருக்கிறேன் என்று தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது.

நடிக்க வந்த உடனே தல, தளபதி படங்களில் வாய்ப்பை எதிர்பார்த்து நான் அவரின் தீவிர ரசிகை என்று தெரிவித்துவிடுவீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

823 total views